பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க மக்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....
பொதுவாக
பற்களை பிடுங்கக் கூடாது.கீழ்ப்
பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்கவேக்
கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.பல்லு தானே என்று
அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம் பற்குழி போன்ற பிரச்சினைகளை
உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள பாதுகாக்கப்படும்.
இப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.
எனக்கு ஏற்பட்ட
அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......
கடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால்
நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே
எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய்
பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும சொத்தை ஆகி இருக்கிறது, அதனால்
ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை
பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து
கொள்ளலாம் என்றார்கள்.
ஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா
இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான்
கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன்
பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சிஇருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய்
பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடை லாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல...
அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....
ஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும்
சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த
பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும்
கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும்,
உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால்
ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.
முதலில் மரத்து போகும் ஊசியை
கடைவாய் உள்ளே குத்தி னார்கள்.பாதி கன்னம்
மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை
மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை
போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு
துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க
ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன்.எல்லாம்
சுத்தம் செய்த வுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து
கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.
அப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப்
போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெடல் கேப், செராமிக் கேப்
என இரண்டு வகை..மெடல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப்
விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும். (கருப்பு தான் போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு
டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து
கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை
கிடைச்சிடுச்சு.....) சரின்னு செராமிக் போட சொன்னேன்.
அதுக்கு அப்புறம் பல்லின்
அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற
ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள்
சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல்
, கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில்
மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)
எப்படியோ பல்லை
பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து
மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....
இரண்டு வருடம் முன்பே
வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த
பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ இவ்ளோ வலியும்
வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது
என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....
அதுக்கு தான் சொல்றேன்....மீண்டும்
முதல் வரிக்கு வாங்க.....
நேசங்களுடன்
ஜீவானந்தம்






உங்கள் அனுபவம் நிறைய விஷயங்களை எங்களுக்கு தெரிய வெச்சிருச்சு... பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஉங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
ஜீவா சார் பல் வலியேட பிளாக்கை போட்டு பல்லை எல்லாம் கூசவச்சிட்டீங்க நல்ல பிளாக்
ReplyDeleteதங்களின் சொந்த தகவலுக்கு நன்றி
ReplyDeleteபல்ல புடிங்கி விட்டீங்க...ஹிஹி
ReplyDeletegud post..entha hospital..very low rate
ReplyDeleteஅட ராமா.. ஒரு பல்லுக்கா இத்தனை அக்கப்போரு. . . . .
ReplyDeleteஒரு பல்லு புடுங்க இவ்வலவு செலவா ஆகும் . ..!
[url=http://directlenderloandirectly.com/#uhvxy]payday loans online[/url] - direct lender payday loans , http://directlenderloandirectly.com/#oqxsz payday loans online
ReplyDelete